Tuesday, January 19, 2010

பள்ளி மாணவர்களுக்கானப் போட்டி



பள்ளி மாணவர்களுக்கானப் கணினித் தமிழ் வரைகலைப் போட்டி. மாணவர்கள் பதிவுச் செய்ய 
இங்கே செல்லவும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாயிலாக தமிழ் இணைய மாநாட்டு குழுவினர் இணைந்து பல்வேறு  போட்டிகள் நடத்தத் திட்டமிட்டு சிறப்பான அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்தும் முகமாக முதன் முறையாக, மாநாட்டின் சிறப்பினை அனைவரும் பெறவேண்டும் என்ற  மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆர்வத்திற்கு இணங்க, மிகப்பெரிய அளவில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் தமிழகப் பள்ளிகளின் மாணவச் செல்வங்களுக்கு Paint Brush ((தூரிகை வரைவு) போட்டி நடைபெறவுள்ளது.  திருக்குறள் (அறத்துப்பால், பொருட்பால்), பழமொழி, ஆத்திசூடி என்ற இம்மூன்றனுள்   ஒன்றைத்    தேர்ந்து கொண்டு, ஒரு பாடலை வரைகலைப்பதிவை ஓரே படக்காட்சியாக Paint Brush (தூரிகை வரைவு) அல்லது அதேபோன்ற மென்பொருள்    தூரிகைச் சாதனத்தைக்        கொண்டு    45     நிமிடங்களுக்கும்  குழுப் போட்டிகளுக்கு  1 மணி நேரம் என்ற அளவில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவு செய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது. 
 
தமிழகத்திலுள்ள அனைத்து மேநிலைப் பள்ளி  மாணவச் செல்வங்களுக்கு (ANIMATION)  அசைநிலை  வரைகலை போட்டியும் நடைபெறவிருக்கிறது.   இப்போட்டிகளுக்கு பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், கலைஞரின் சங்கத்தமிழ் பாடல்கள் இம்மூன்றனுள் ஒன்றைத் தேர்ந்து கொண்டு ஒரு பாடலை படக்காட்சியாக அசைநிலை வரைகலை அல்லது அதே போன்ற மென்பொருள் தூரிகைச் சாதனத்தை கொண்டு ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவுசெய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது.   இப்போட்டிகள் முதல் சுற்றாக மாவட்ட ரீதியாக நடைப்பெற்று,  பிறகு இறுதி சுற்றாக  தமிழக அளவில்  நடைபெறவிருக்கிறது.   தமிழக அளவில்  சுமார் 8000  பள்ளிகளிலிருந்து ஏறத்தாழ 15,000 மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.   வெற்றி பெறுகிறவர்களை கோவையில் நடைபெறும் இணைய மாநாட்டில் பரிசளிக்கப்படுவர்.  போட்டிகளில் வெல்லும் மாணவ, மாணவியர்களுக்கு   கண்ணையும்,  கருத்தையும்  கவரும்   தகுதியான பரிசுகளும், அதிகமான மாணவர்களை தனிப்போட்டி,  குழுப்போட்டிக்கு அனுப்பவிருக்கும் பள்ளிகளுக்கு LAPTOP  (மடிக்கணினி) பரிசும் வழங்கப்படவிருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு அமைந்தது போல தமிழகத்திலுள்ள  அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை, பல்கலைக்கழகங்கள்,  கலை, அறிவியல், கல்லூரிகள்,   பொறியியல், மருத்துவம், சட்டம்,  வேளாண்மை, விளையாட்டு நலம் வாரியாக  மற்றும் மாவட்ட வாரியாக தமிழ்க் கணினி போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.






மேலும்: தமிழக அரசின் அதிகாரப் பூர்வ செய்திக் குறிப்பு இங்கே.

No comments:

Post a Comment