தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பு பக்கம் 4 (14 சனவரி 2010) வெளிவந்த தமிழ் இணைய மாநாடுப் பற்றியச் செய்தி.
தமிழ் இணைய மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்பு
ஜனவரி 14,2010,00:00 IST
சென்னை:கோவையில் நடைபெற உள்ள தமிழ் இணைய மாநாட்டிற்கு, ஆய்வுக்
கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள
செய்திக்குறிப்பு:கோவையில், வரும் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
நடைபெற உள்ளது. அதோடு இணைந்து, உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்,
ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்த உள்ளது.
இணையம் வளர்க்கும் தமிழ்' என்பதை மையக் கருத்தாக கொண்டு, கருத்தரங்கம்,
சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று பிரிவுகளில் இம்மாநாடு நடைபெறும்.
தமிழ்க் கணினியம், தமிழ் இணையத்தின் அண்மைகால முன்னேற்றங்கள், சவால்கள்
குறித்து, இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கும் வகையில், 300 பேர் மட்டுமே
இதில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில், ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர், கணினியில்
தமிழ் பயன்பாடு குறித்த தங்கள் கட்டுரையின் சுருக்கத்தை, ஒரு பக்க அளவில்
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, ti2010-cpc@infitt.org என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். www.infitt.org/ti2010 என்ற
இணையதளத்தில், இம்மாநாடு குறித்த தகவல்களை பெறலாம்
No comments:
Post a Comment