Tuesday, January 19, 2010

தினகரன் - 19 சனவரி 2010

செம்மொழி மாநாட்டையொட்டி மாணவர்களுக்கு ‘அனிமேஷன்’ போட்டி



கோவை:  கோவையில் வரும் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற
உள்ளது.  மாநாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை,
ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக, பேப்பரில்
ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டிகளே நடக்கும். ஆனால், செம்மொழி
மாநாட்டில் புதுமையான முறையில், கம்ப்யூட்டரில் ஓவியம் வரையும் போட்டி
நடத்தப்படுகிறது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனிமேஷன் போட்டியும் நடக்கிறது.

இதற்கான அறிவிப்பை சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம்
வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 10ம் தேதி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட
உள்ளன. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு செம்மொழி மாநாட்டு
மேடையில் முதல்வர் கருணாநிதி லேப்டாப் பரிசு வழங்குகிறார். இதுகுறித்து
மேலும் தகவவல்களை tamilinternetcompetition @ gmail.com என்ற மின்னஞ்சல்
முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.