Wednesday, March 31, 2010

தமிழ் இணைய மாநாடு 2010 பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்குரிய கட்டுரைப் போட்டி


தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது பயனர்களால் கூட்டாக ஆக்கப்படும் ஓர் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியத் திட்டம்.தமிழில் விரிவான, தரமான பல்துறைக் கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயற்படுகிறது. இத்திட்டத்துக்கு ஏற்ற கட்டுரைகளை எழுதும் போட்டியைத் தமிழக அரசு தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்துகிறது.

பின்வரும் துறைகளைச் சார்ந்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து போட்டிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு துறைக்குமான சில எடுத்துக்காட்டுத் தலைப்புகளை அடைப்புக்குறிகளில் காணலாம். விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படைத் தலைப்பைக் கொண்டு கிரிக்கெட், கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டு வீரர்களைப் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம். அதே போல் இத்துறைகளின் கீழ் அடங்கக்கூடிய எத்தலைப்பைப் பற்றியும் எழுதலாம்.

இவை எடுத்துக்காட்டுத் தலைப்புகள் மட்டுமே:
· பொறியியல் (அண்மைய கருவிகள் - தொழில்நுட்பங்கள், பொறியியல் விதிகள்)
· மருத்துவம் (நோய்கள், மருத்துவ முறைகள், உளவியல், மனித உடற்கூறியல்)
· கால்நடை மருத்துவம் (விலங்குகள், விலங்கு நோய்கள், விலங்கு உடற்கூறியல்)
· சட்டம் (பன்னாட்டுச் சட்டம், சட்ட முறைகள்)
· கலை மற்றும் அறிவியல் (விடுதலைப் போர்கள், பொருளாதார விதிகள், புவி அமைப்பு, இலக்கியம், அறிவியல் விதிகள், அறிவியலாளர்கள்)
· விளையாட்டு (விளையாட்டு வீரர்கள், விளையாட்டுகள் வரலாறு, விளையாட்டுகளின் விதிகள்)
· வேளாண்மை (தாவரங்கள், தாவர நோய்கள், உழவு முறைகள், நவீன வேளாண்மை)
· கல்வியியல் (சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி) மேலே குறிப்பிட்ட எட்டு துறைகளிலும், துறைக்கு 3 பரிசுகள் என 24 பரிசுகள் உள்ளன

கூடுதல் விவரங்களுக்கும் பதிவுச்செய்யவும் பார்க்க:http://www.tamilint2010.tn.gov.in

போட்டிக்கான விக்கிப்பீடியா பக்கத்து செல்ல இங்கே சொடுக்கவும்