கணினியில் தமிழின் வளர்ச்சி பற்றியும் தமிழ் இணைய மாநாடு 2010 பற்றியும் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் சிறிய உரை. மாநாடு பற்றி மேலும் விவரங்களுக்கு பார்க்க: www.infitt.org/ti2010
Saturday, January 30, 2010
Thursday, January 21, 2010
Wednesday, January 20, 2010
தினமணி சென்னை - 21 சனவரி 2010
25 ஆயிரம் சதுர அடியில் தமிழ் இணைய கண்காட்சி. தினமணி நாளிதழ் சென்னை பதிப்பு பக்கம் 7 (21 சனவரி 2010) வெளிவந்த தமிழ் இணைய மாநாடுப் பற்றியச் செய்தி.
தமிழ் இணைய மாநாடு 2010 கண்காட்சி அறிவிப்பு
தமிழ்க் கணினி வளர்ச்சி குறித்த தமிழ் மென்பொருள் கண்காட்சி கோவையில்
தமிழ் இணைய மாநாட்டில் பெறுவிருக்கின்றது. இக்கண்காட்சி பத்தாயிரம் சதுர அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மென்பொருள் கூடங்கள் அமைக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் அனைத்துலகமும் ஈர்க்கும் அளவிற்கு மென்பொருட்கள், தமிழக அரசின் மின் ஆளுகை அரங்குகள், தமிழ் மல்டிமீடியா சிடி அரங்குகள், தமிழ் மென்பொருட்கள் இடம் பெறுவிருக்கின்றன. இக்கண்காட்சியின் வாயிலாக பொதுமக்கள் தமிழ் மென்பொருளையும் தமிழக அரசின் தமிழ் பயன்பாடுகள் மற்றும் அலுவலக செயல்பாடுகளையும் பயன்படுத்திப் பார்க்கலாம். உத்தமம் மற்றும் கணித் தமிழ்ச்சங்கம் என்ற தமிழ்க் கணினி அமைப்பும், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்தவிருக்கிறது. இக்கண்காட்சிப் பற்றி மேலும் தகவலுக்கு மா. ஆண்டோ பீட்டர் ktsasia@gmail.com
தமிழ் இணைய மாநாட்டில் பெறுவிருக்கின்றது. இக்கண்காட்சி பத்தாயிரம் சதுர அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மென்பொருள் கூடங்கள் அமைக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் அனைத்துலகமும் ஈர்க்கும் அளவிற்கு மென்பொருட்கள், தமிழக அரசின் மின் ஆளுகை அரங்குகள், தமிழ் மல்டிமீடியா சிடி அரங்குகள், தமிழ் மென்பொருட்கள் இடம் பெறுவிருக்கின்றன. இக்கண்காட்சியின் வாயிலாக பொதுமக்கள் தமிழ் மென்பொருளையும் தமிழக அரசின் தமிழ் பயன்பாடுகள் மற்றும் அலுவலக செயல்பாடுகளையும் பயன்படுத்திப் பார்க்கலாம். உத்தமம் மற்றும் கணித் தமிழ்ச்சங்கம் என்ற தமிழ்க் கணினி அமைப்பும், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்தவிருக்கிறது. இக்கண்காட்சிப் பற்றி மேலும் தகவலுக்கு மா. ஆண்டோ பீட்டர் ktsasia@gmail.com
Tuesday, January 19, 2010
பள்ளி மாணவர்களுக்கானப் போட்டி
பள்ளி மாணவர்களுக்கானப் கணினித் தமிழ் வரைகலைப் போட்டி. மாணவர்கள் பதிவுச் செய்ய
இங்கே செல்லவும்.
இங்கே செல்லவும்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாயிலாக தமிழ் இணைய மாநாட்டு குழுவினர் இணைந்து பல்வேறு போட்டிகள் நடத்தத் திட்டமிட்டு சிறப்பான அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்தும் முகமாக முதன் முறையாக, மாநாட்டின் சிறப்பினை அனைவரும் பெறவேண்டும் என்ற மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆர்வத்திற்கு இணங்க, மிகப்பெரிய அளவில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் தமிழகப் பள்ளிகளின் மாணவச் செல்வங்களுக்கு Paint Brush ((தூரிகை வரைவு) போட்டி நடைபெறவுள்ளது. திருக்குறள் (அறத்துப்பால், பொருட்பால்), பழமொழி, ஆத்திசூடி என்ற இம்மூன்றனுள் ஒன்றைத் தேர்ந்து கொண்டு, ஒரு பாடலை வரைகலைப்பதிவை ஓரே படக்காட்சியாக Paint Brush (தூரிகை வரைவு) அல்லது அதேபோன்ற மென்பொருள் தூரிகைச் சாதனத்தைக் கொண்டு 45 நிமிடங்களுக்கும் குழுப் போட்டிகளுக்கு 1 மணி நேரம் என்ற அளவில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவு செய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து மேநிலைப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு (ANIMATION) அசைநிலை வரைகலை போட்டியும் நடைபெறவிருக்கிறது. இப்போட்டிகளுக்கு பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், கலைஞரின் சங்கத்தமிழ் பாடல்கள் இம்மூன்றனுள் ஒன்றைத் தேர்ந்து கொண்டு ஒரு பாடலை படக்காட்சியாக அசைநிலை வரைகலை அல்லது அதே போன்ற மென்பொருள் தூரிகைச் சாதனத்தை கொண்டு ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் தெரிவுசெய்த பொறியியல் கல்லூரியில் 12.02.2010 அன்று நடைபெறவிருக்கிறது. இப்போட்டிகள் முதல் சுற்றாக மாவட்ட ரீதியாக நடைப்பெற்று, பிறகு இறுதி சுற்றாக தமிழக அளவில் நடைபெறவிருக்கிறது. தமிழக அளவில் சுமார் 8000 பள்ளிகளிலிருந்து ஏறத்தாழ 15,000 மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறுகிறவர்களை கோவையில் நடைபெறும் இணைய மாநாட்டில் பரிசளிக்கப்படுவர். போட்டிகளில் வெல்லும் மாணவ, மாணவியர்களுக்கு கண்ணையும், கருத்தையும் கவரும் தகுதியான பரிசுகளும், அதிகமான மாணவர்களை தனிப்போட்டி, குழுப்போட்டிக்கு அனுப்பவிருக்கும் பள்ளிகளுக்கு LAPTOP (மடிக்கணினி) பரிசும் வழங்கப்படவிருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு அமைந்தது போல தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல், கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, விளையாட்டு நலம் வாரியாக மற்றும் மாவட்ட வாரியாக தமிழ்க் கணினி போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.
மேலும்: தமிழக அரசின் அதிகாரப் பூர்வ செய்திக் குறிப்பு இங்கே.
மாலை முரசு - 20 சனவரி 2010
மாலை முரசு - 20 சனவரி 2010ல் வெளிவந்த செய்திக் கட்டுரை - ”மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் வரைபடப் போட்டி. எல்லா மாவட்டங்களிலும் பிப்ரவரி 12-ந் தேதி நடத்தப்படுகிறது”.
தினமணி சென்னை - 20 சனவரி 2010
தினமணி நாளிதழ் சென்னை பதிப்பு பக்கம் 3 (20 சனவரி 2010) வெளிவந்த தமிழ் இணைய மாநாடுப் பற்றியச் செய்தி.

தினகரன் - 19 சனவரி 2010
செம்மொழி மாநாட்டையொட்டி மாணவர்களுக்கு ‘அனிமேஷன்’ போட்டி
கோவை: கோவையில் வரும் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற
உள்ளது. மாநாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை,
ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக, பேப்பரில்
ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டிகளே நடக்கும். ஆனால், செம்மொழி
மாநாட்டில் புதுமையான முறையில், கம்ப்யூட்டரில் ஓவியம் வரையும் போட்டி
நடத்தப்படுகிறது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனிமேஷன் போட்டியும் நடக்கிறது.
இதற்கான அறிவிப்பை சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம்
வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 10ம் தேதி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட
உள்ளன. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு செம்மொழி மாநாட்டு
மேடையில் முதல்வர் கருணாநிதி லேப்டாப் பரிசு வழங்குகிறார். இதுகுறித்து
மேலும் தகவவல்களை tamilinternetcompetition @ gmail.com என்ற மின்னஞ்சல்
முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
Sunday, January 17, 2010
தினகரன் சென்னை - 16 சனவரி 2010
Friday, January 15, 2010
தினமலர் சென்னை - 14 சனவரி 2010
தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பு பக்கம் 4 (14 சனவரி 2010) வெளிவந்த தமிழ் இணைய மாநாடுப் பற்றியச் செய்தி.

தமிழ் இணைய மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்பு
ஜனவரி 14,2010,00:00 IST
சென்னை:கோவையில் நடைபெற உள்ள தமிழ் இணைய மாநாட்டிற்கு, ஆய்வுக்
கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள
செய்திக்குறிப்பு:கோவையில், வரும் ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
நடைபெற உள்ளது. அதோடு இணைந்து, உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்,
ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்த உள்ளது.
இணையம் வளர்க்கும் தமிழ்' என்பதை மையக் கருத்தாக கொண்டு, கருத்தரங்கம்,
சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று பிரிவுகளில் இம்மாநாடு நடைபெறும்.
தமிழ்க் கணினியம், தமிழ் இணையத்தின் அண்மைகால முன்னேற்றங்கள், சவால்கள்
குறித்து, இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கும் வகையில், 300 பேர் மட்டுமே
இதில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில், ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர், கணினியில்
தமிழ் பயன்பாடு குறித்த தங்கள் கட்டுரையின் சுருக்கத்தை, ஒரு பக்க அளவில்
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, ti2010-cpc@infitt.org என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். www.infitt.org/ti2010 என்ற
இணையதளத்தில், இம்மாநாடு குறித்த தகவல்களை பெறலாம்
Subscribe to:
Posts (Atom)