உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ‘விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்’ என்ற போட்டியை நடத்துகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா என்று சொல்லப்படுவது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியம். கிட்டத்தட்ட என்சைக்ளோபீடியா மாதிரியானது. என்சைக்ளோபீடியாவை ஓர் வல்லுநர் குழு உருவாக்குகிறது. ஆனால், விக்கிப்பீடியாவை மக்களே உருவாக்கலாம். யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியாவில் உறுப்பினராகச் சேர்ந்து தகவல் பக்கங்களை உருவாக்க முடியும். இத்திட்டத்திற்கு ஏற்ப தகவல் பக்கங்களை எழுதும் போட்டியையே தமிழக அரசு நடத்துகிறது. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குநர் மருத்துவம் (பிசியோதெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் யார் வேண்டுமானாலும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
மேலும் படிக்க கீழே பார்க்கவும்: